உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர் - பயனர்கள் அவதி


உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர் - பயனர்கள் அவதி
x

Image Courtesy : AFP

பல நாடுகளில் டுவிட்டர் இன்று மாலை திடீரென முடங்கியது

புதுடெல்லி,

பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் இன்று திடீரென முடங்கியது. இன்று மாலை 5.30 மணி அளவில் உலகம் முழுவதும் டுவிட்டர் சேவையை அணுக முடியவில்லை என்ற புகார்கள் எழுந்தன. பின்னர் சிறிது நிமிடங்களில் (5:46 மணிக்கு) சுமார் 55,000 பயனர்களுக்கு டுவிட்டர் செயல் இழந்ததாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான "டவுன்டிடெக்டார்" தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மாலை 6.10 மணி வரை சுமார் 477 டுவிட்டர் கணக்குகள் முடங்கியதாக "டவுன்டிடெக்டார்" தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் மற்றும் இத்தாலியிலும் இன்று பயனர்களுக்கு டுவிட்டர் முடங்கியது. சில நிமிடங்கள் மட்டுமே செயலிழந்த டுவிட்டர் சேவை பின்னர் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியது.


Next Story