கொடுத்து வைத்தவன் வேலை இல்லை...! ஆனால் 3 மனைவிகள் அனைவரும் வேலையில் ...!


கொடுத்து வைத்தவன் வேலை இல்லை...! ஆனால் 3 மனைவிகள் அனைவரும் வேலையில் ...!
x

நிக் ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால், அனைத்து அதிகாரமும் ராணியிடம் உள்ளது.

லண்டன்

ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை திருமணம் செய்து கொண்ட ஒருவரை பாருங்கள்.

கணவன் எப்படி இருக்கிறார், மனைவிகள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதை படங்களைப் பார்த்தால் புரியும்.

இந்த மூன்று மனைவிகளின் கணவர் பெயர் நிக் டேவிஸ், அவருக்கு வயது 39. நிக் தன்னை ஒரு 'டிராபி கணவர்' என்று விவரிக்கிறார். அதாவது, அவர் தனது மூன்று மனைவிகளுக்கு பரிசு போன்றவர். நிக்கின் 3 மனைவிகள் வேலை செய்துவருகிறார்கள். ஆனால் நிக் வேலையில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார். எப்படி...?

நிக் ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால், அனைத்து அதிகாரமும் ராணியிடம் உள்ளது. அதனால்தான் எனது அனைத்து அதிகாரங்களையும் ராணிகளுக்கு வழங்கிவிட்டேன் என்கிறார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி ஏப்ரலை ஒரு பல்கலைக்கழகத்தில் தான் சந்தித்தார். இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு, நிக் ஜெனிபரை 2வது திருமணம் செய்கிறார்.அதன் பிறகு, டேனியல் மூவரின் வாழ்க்கையிலும் நுழைகிறார். 4 பேரும் ஒரு வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இரவில் தனது மூன்று மனைவிகளுடன் தூங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் ஒவ்வொரு மனைவியுடனும் தனித்தனியாக தூங்குவதாக கூறுகிறார்.


Next Story