ஈரானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்


ஈரானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்
x

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெஹ்ரான்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் தெற்கு கிஷ் தீவில் இன்று மூன்று நிலநடுக்கள் ஏற்பட்டது. முதல் இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள தீவில் 5.3 ரிக்டர் அளவிலும் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் தெரியவரவில்லை.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் துபாய் வரை உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயில் வசிக்கும் மக்கள், நில அதிர்வை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். 30 நொடிகள் வரை இந்த அதிர்வு நீடித்ததாகவும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Next Story