"உத்தரபிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு" - நியூயார்க்கில் மாநில நிதி மந்திரி பேச்சு
உத்தரபிரதேச மாநிலத்தின் ஏற்றுமதி ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக நிதி மந்திரி சுரேஷ் குமார் கண்ணா தெரிவித்தார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலகளாவிய பொருளாதார உச்சிமாநாட்டில், உத்தரபிரதேச மாநில நிதி மந்திரி சுரேஷ் குமார் கண்ணா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் உத்தரபிரதேச மாநிலத்தின் ஏற்றுமதி 88 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து தற்போது ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் உத்தரபிரதேசத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே தங்கள் இலக்கு என அவர் கூறினார். இதனிடையே மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் வழியில் மாநிலம் புதிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story