'தைவானை மிரட்டுவதை நிறுத்துங்கள்' - சீனாவை எச்சரித்த தைவானின் புதிய அதிபர்


New Taiwan President warns China
x

Image Courtesy : AFP

தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிபர் வில்லியம் லாய் எச்சரித்தார்.

தைபெய்,

தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீப காலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றுள்ளார். 64 வயதான வில்லியம் லாய் ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது. இந்நிலையில் இன்று பதவியேற்பு விழாவில் பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

மேலும் தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது என்றும், தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story