தொழில்நுட்ப பிரச்சினைகள்: இந்திய ரெயில் பெட்டிகள் மீது இலங்கை அதிருப்தி


தொழில்நுட்ப பிரச்சினைகள்: இந்திய ரெயில் பெட்டிகள் மீது இலங்கை அதிருப்தி
x

கோப்புப்படம்

இந்திய ரெயில் பெட்டிகளில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுவதாக இலங்கை அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கை அரசு இந்தியாவில் இருந்து 160 ரெயில் பெட்டிகளை இறக்குமதி செய்துள்ளது. இந்திய கடன் எல்லைக்கு உட்பட்ட ரூ.120 கோடியில் வாங்கப்பட்ட இந்த ரெயில் பெட்டிகளில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.உயரம், அகலம், நீளம் போன்றவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் இலங்கையின் தண்டவாளங்களில் இவற்றை சரியாக இயக்க முடியவில்லை. இந்த பிரச்சினைகளால் ரெயிலின் வேகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

எனவே இந்த ரெயில் பெட்டிகள் குறித்து இலங்கை அதிருப்தியை வெளியிட்டிருப்பதாகவும், தங்களுக்கான குறிப்பிட்ட எந்த நோக்கத்தையும் இந்த பெட்டிகள் நிறைவேற்றவில்லை என்று ரெயில்ேவ கூறியிருப்பதாகவும் அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.


Next Story