உக்ரைன் மீது ஆளில்லா விமானங்களை கொண்டு கடுமையாக தாக்கிய ரஷியா


உக்ரைன் மீது ஆளில்லா விமானங்களை கொண்டு கடுமையாக தாக்கிய ரஷியா
x
தினத்தந்தி 9 May 2023 5:34 PM GMT (Updated: 9 May 2023 5:37 PM GMT)

உக்ரைன் மீது 60 ஆளில்லா விமானங்களை கொண்டு இன்று கடுமையாக தாக்கிய ரஷியா பல கட்டிடங்களை அழித்து உள்ளது.

கீவ்,

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், 1945-ம் ஆண்டு 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை, தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அதிபர் புதின் மக்களுக்கு உரையாற்றினார்.

இதனை முன்னிட்டு பல மாதங்களுக்கு பின்னர், உக்ரைனின் தலைநகர் கீவ், கருங்கடல் நகரான ஒடிசா மற்றும் பிற நகரங்களை இலக்காக கொண்டு, ரஷியா இன்று கடுமையாக தாக்கியது.

இதுபற்றி உக்ரைனின் கீவ் நகர மேயர் கூறும்போது, ஈரானில் தயாரிக்கப்பட்ட 60 கமிகேஜ் ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரைன் மீது ரஷியா இன்று கடுமையான தாக்குதலை தொடுத்தது. இதில், பல்வேறு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.

இவற்றில் 36 பகுதிகள் தனது நகரங்கள் ஆகும் என கூறியுள்ளார். இந்த தாக்குதலை அடுத்து பொதுமக்களில் 5 பேர் காயமடைந்தனர் என கூறியுள்ளார்.

இதேபோன்று, ஒடிசா நகரில் உணவு கிடங்கு ஒன்றின் மீது ஏவுகணை தாக்கியதில் அது தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறினர்.


Next Story