பின்லாந்து தேர்தலில் பிரதமரின் கட்சி தோல்வி; 93.4 சதவீத வாக்குகளுடன் எதிர்க்கட்சி வெற்றி


பின்லாந்து தேர்தலில் பிரதமரின் கட்சி தோல்வி; 93.4 சதவீத வாக்குகளுடன் எதிர்க்கட்சி வெற்றி
x

பின்லாந்து நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் 93.4 சதவீத வாக்குகளுடன் எதிர்க்கட்சி வெற்றி பெற்று, பிரதமர் சன்னா மரீன் கட்சி தோல்வி அடைந்து உள்ளது.

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டில் பிரதமராக சன்னா மரீன் (வயது 37) இருந்து வருகிறார். அந்நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பெண் பிரதமரான அவர் மக்களிடம் அதிக செல்வாக்குடன் காணப்பட்டார்.

எனினும், அந்நாட்டின் கடன் அதிகரித்து உள்ளது என ஆர்ப்போ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களால் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. தொடர்ந்து பொது செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டது. இந்த நிலையில், பின்லாந்து நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

இதில், பெட்டேரி ஆர்ப்போ என்பவர் தலைமையிலான எதிர்க்கட்சியான, மத்திய-வலது சாரி தேசிய கூட்டணி கட்சி 93.4 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்து உள்ளது.

இதனால், ஆர்ப்போவின் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் வெற்றி பெற்று உள்ளன. இதனை தொடர்ந்து, வலது சாரி கட்சியான பின்ஸ் கட்சி அதிக வாக்குகளை கைப்பற்றி 2-வது இடம் பிடித்து உள்ளது.

பின்ஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் கூடுதலாக 7 புதிய எம்.பி.க்கள் கிடைத்து உள்ளனர். இதனால், 3-வது இடம் பிடித்த பிரதமர் சன்னா மரீன் சார்ந்த சமூக ஜனநாயக கட்சி தோல்வி அடைந்து உள்ளது. அடுத்து பின்லாந்தில் விரைவில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story