முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ பயணம் - தொழில் அதிபர்களை சந்திக்கிறார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ பயணம் - தொழில் அதிபர்களை சந்திக்கிறார்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (2-ந்தேதி) சிகாகோ நகரம் செல்கிறார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்க நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அங்குள்ள சான்பிரான்ஸ் சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ், ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

சான்பிரான்சிஸ்கோ நகரில் 5 நாட்கள் தங்கி இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (2-ந்தேதி) சிகாகோ நகரம் செல்கிறார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள். அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.


Next Story