பலாவ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு


பலாவ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
x

பலாவ் தன்னாட்சி குடியரசு நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மெலிகியோக்,



அமெரிக்க கண்டத்தின் பசிபிக் தீவுக்கு உட்பட்ட பகுதியில் தன்னாட்சி குடியரசாக உள்ள பலாவ் நாட்டின் மெலிகியோக் மாகாணத்தின் தென்கிழக்கே 1,165 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.01 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story