ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி
x

கோப்புப்படம் 

மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது.

சமர்கண்ட்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து வியாழக்கிழமை உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார்.

இதனை அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர் விளாதிமிர்புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது. உக்ரைனில் ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி மற்றும் புதின் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள், ஆசிய பசிபிக் பிராந்திய நிலவரம், ஐ.நா. சபை மற்றும் ஜி 20 நாடுகள் அமைப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


Next Story