நட்பான இந்தியாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் - ரஷிய அதிபர் புதின்


நட்பான இந்தியாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் - ரஷிய அதிபர் புதின்
x

Image Courtesy: AFP

இந்திய பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமர்கண்ட்,

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் நரேந்திரமோடி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, நாளை (இன்று) தனது 72 வது பிறந்தநாள் கொண்டாட உள்ள இந்திய பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விளாடிமிர் புதின் கூறுகையில், இந்தியாவுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனது நண்பரே நாளை நீங்கள் உங்கள் பிறந்தநாளை கொண்டாட உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். ரஷிய நடைமுறைபடி, நாங்கள் ஒருபோதும் முன்கூட்டியே வாழ்த்துக்கள் தெரிவிக்கமாட்டோம். ஆகையால், நான் இப்போது வாழ்த்து கூறமாட்டேன். ஆனால், அதைப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். நாங்கள் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். நட்பான இந்தியாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா செழிக்க வாழ்த்துகிறோம்' என்றார்.


Next Story