இலங்கையில் எரிபொருள் வாங்க வரிசை கட்டி நிற்கும் மக்கள்
இலங்கையின் ஒருசில பகுதிகளில் பெட்ரோல், டீசல் விநியோகிப்பது நிறுத்தப்பட்டது.
கொழும்பு,
இலங்கையின் முல்லைத்தீவு, நுவரெலியா ஆகிய இடங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை பெட்ரோல் நிலையத்தில், பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று இப்பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட பெட்ரோல் , டீசல் விநியோகிக்கும் பணி துவங்கியது. இதே போல் நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில், எரிபொருள் வழங்காததை கண்டித்து கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story