பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய தடை நீட்டிப்பு


பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய தடை நீட்டிப்பு
x

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் பெண் நீதிபதியை மிரட்டியதாக புகார் எழுந்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் பெண் நீதிபதியை மிரட்டியதாக புகார் எழுந்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், போலீசாரால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சட்டினார்.

மேலும், தனது கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட பெண் நீதிபதி ஆகியோரை மிரட்டும் வகையில் பேசினார். அவரது உரை நாடு முழுவதும் செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், இம்ரான்கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்தது.

இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (ஏடிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. எனினும், கைது செய்யப்பட்டால் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று இம்ரான் கானின் கட்சியினருக்கு தலைமை உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையில், முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் இம்ரான் கான் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசரித்த கோர்ட், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. இடைக்கால ஜாமீன் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Next Story