வடகொரியாவில் பரவுவது சாதாரண 'ப்ளூ' காய்ச்சல்; கொரோனா அல்ல - அரசு விளக்கம்


வடகொரியாவில் பரவுவது சாதாரண ப்ளூ காய்ச்சல்; கொரோனா அல்ல - அரசு விளக்கம்
x

சீன எல்லையை ஒட்டியுள்ள ரியாங்காங் மகாணத்தின் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.

சியோல்,

வடகொரியா கொரோனாவை முற்றிலும் ஒழித்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள ரியாங்காங் மகாணத்தின் சில பகுதிகளிள் சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.

உடனே அதிகாரிகளால் சீன எல்லையை ஒட்டியுள்ள ரியாங்காங் மகாணத்தின் சில பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கு 4 பேருக்கு புதிதாக காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்க்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு தரப்பு பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண 'ப்ளூ' காய்ச்சல் தான் எனவும் கொரோனா அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் போதிய அளவிலான கொரோனா பரிசோதனை மையங்கள் இல்லாததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் வடகொரியாவில் ஒமைக்ரான் பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.வடகொரியாவில் அரசு தரப்பு தெரிவித்துள்ள தகவலின்படி, 4.8 மில்லியன் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 74 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இருந்து பறந்து வரும் பலூன்களால் தான் தங்கள் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவுவதாக அந்நாட்டு குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


Next Story