பிரேசில், கிரீசிலும் நுழைந்த குரங்கு அம்மை பாதிப்பு


பிரேசில், கிரீசிலும் நுழைந்த குரங்கு அம்மை பாதிப்பு
x

கோப்புப்படம்

பிரேசில், கிரீசிலும் முதன்முறையாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது

பிரேசிலியா,

ஐரோப்பிய நாடுகளிலும், கனடா உள்ளிட்ட பிற நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கடந்த 8-ந் தேதி நிலவரப்படி உலகமெங்கும் சுமார் 1,000 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பதை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்தது.

இந்த நிலையில் பிரேசில் நாட்டிலும் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. போர்ச்சுக்கல் சென்று திரும்பிய 41 வயதான ஆணுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் பிரேசிலியாவில் எமிலியோ ரிபாஸ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரேசிலில் மற்றொருவருக்கும் குரங்கு அம்மை அறிகுறி காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. கிரீஸ் நாட்டிலும் குரங்கு அம்மை நுழைந்து விட்டது. அங்கும் போர்ச்சுக்கல் சென்று திரும்பிய ஒரு ஆணுக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏதென்சில் உள்ள ஆண்டிரியாஸ் சிக்ரோஸ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story