காதலியின் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கில் 'உச்சா' போன காதலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


காதலியின் விலை உயர்ந்த  ஹேண்ட் பேக்கில் உச்சா போன  காதலருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x

காதலியின் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்த காதலனுக்கு 91 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர் அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறி விட்டது.

இதில் கோபம் அடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் (louis vuitton) ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். =இதனால் காதலி கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார். இந்த ப்பெகெகின் விலை ரூ 1.5 லட்சம் இருக்கும்

தனது பேக்கில் சிறுநீர் கழித்ததற்காகநஷ்ட ஈடு கேட்டு காதலி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

விசாரணையின் போது அதில், தான் சிறுநீர் கழிக்கவில்லை என்றும் காதலியை வெறுப்பேற்றுவதற்காக நடித்தேன் என்று காதலன் கூறி உள்ளார்.

இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் காதலன் பெண்ணின் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்தது நிரூபணமாகியது.

இதனையடுத்து அந்த காதலன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அபராதமாக 1,150 அமெரிக்க டாலர் (ரூ.91,634) விதிக்கப்பட்டிருக்கிறது.


Next Story