ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபர் பாகிஸ்தான் பிரதமரின் வீட்டுக்குள் ஊடுருவியதால் பரபரப்பு


ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபர் பாகிஸ்தான் பிரதமரின் வீட்டுக்குள் ஊடுருவியதால் பரபரப்பு
x

பலத்த பாதுகாப்பை மீறி பிரதமரின் வீட்டுக்குள் மர்ம நபர் ஊடுருவிய சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரதமரின் வீட்டை சுற்றி போடப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் ஒருவர் பிரதமரின் வீட்டுக்குள் ஊடுருவினார்.

வீட்டின் ஒரு பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பயங்கரவாத தடுப்பு படையினரிடம் ஒப்படைந்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் யார்? எதற்காக பிரதமரின் வீட்டுக்குள் நுழைந்தார்? பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து எப்படி? என்பன குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பலத்த பாதுகாப்பை மீறி பிரதமரின் வீட்டுக்குள் மர்ம நபர் ஊடுருவிய சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story