5-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக பிடித்த மனிதர்! பதைபதைக்க செய்யும் வீடியோ


5-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தையை லாவகமாக பிடித்த மனிதர்! பதைபதைக்க செய்யும் வீடியோ
x

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பீஜிங்,

சீனாவின் சேஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் பகுதியில் உள்ள சாலையோரம் அமர்ந்திருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 5-வது மாடியிலிருந்து ஒரு குழந்தை கீழே விழுந்துள்ளது.

அவ்வழியாக நடந்து சென்ற நபர் இதை கவனித்துள்ளார். உடனே அவர் அந்த வளாகத்தின் அருகில் சென்று தன் இரு கைகளையும் விரித்து அந்த குழந்தை தரையில் விழாதபடி பத்திரமாக பிடித்தார். இதனால் அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தையின் கால்கள் மட்டும் நுரையீரல் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறினர்

.மாடியில் இருந்து கீழே விழுந்த இரண்டு வயது குழந்தையை கையால் பிடித்த சீன நபரை மக்கள் ஹீரோ என புகழாரம் சூட்டி கொண்டாடினர். இந்த காட்சியை படம் பிடித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து 31 வயதான சென் டாங் கூறுகையில், "எனக்கு குழந்தையை காப்பாற்றுவதே முக்கியமாக இருந்தது. வேறு எதையும் பற்றியும் நான் யோசிக்கவில்லை. என் கைகளில் காயங்கள் ஏற்பட்டனவா என்பது குறித்தும் எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.

அந்த 2 வயது குழந்தை கவனக்குறைவால் 5-வது மாடியில் இருந்த ஜன்னல் வழியே கீழே விழுந்து, முதல் மாடியில் இருக்கும் ஸ்டீல் கூரையில் விழுந்து, அதன்பின் கீழே விழுந்துள்ளது. இதனால் பலத்த காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.


Next Story