ஜெர்மனியில் கோர்ட் வாசலில் கிடந்த வெட்டப்பட்ட மனித தலை... ஒருவர் கைது


ஜெர்மனியில் கோர்ட் வாசலில் கிடந்த வெட்டப்பட்ட மனித தலை... ஒருவர் கைது
x

Image Courtesy : Reuters

வெட்டப்பட்ட மனித தலையை கோர்ட் வாசலில் போட்டுச் சென்றது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பெர்லின்,

ஜெர்மனியில் உள்ள பான் என்ற பகுதியில் அமைந்திருக்கும் மாவட்ட கோர்ட் வளாகத்தின் வாசலில், நேற்று வெட்டப்பட்ட மனித தலையை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுச் சென்றுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் உடனடியாக அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே சமயம், வெட்டப்பட்ட தலை கிடந்த பான் கோர்ட் வளாகத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலையில் உள்ள ரைன் நதிக்கரையில், தலையில்லாத உடல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story