ரஷிய போரால் இந்தியாவுக்கு ஏற்றம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி


ரஷிய போரால் இந்தியாவுக்கு ஏற்றம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
x

இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் 6 மடங்கு கூடுதல் எரிபொருள் இறக்குமதி செய்துள்ளது என அமெரிக்க குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.



நியூயார்க்,


உக்ரைனில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் ரஷியா தொடுத்துள்ள போர் தொடர்ந்து முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. ரஷியாவை வழிக்கு கொண்டு வர அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்பட நாடுகள் பொருளாதார தடை விதித்தும் அதில் பலனில்லை.

இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டு, வளர்ந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகளை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

தொடர்ந்து, ரஷிய இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று கடந்த செப்டம்பரில் ஜி-7 நாடுகள் முடிவு செய்தன. இதன்படி, இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றது. இதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் முதல் வார தொடக்கத்தில் ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் அதிக அளவில் எரிபொருள் வாங்கியுள்ளது. பிற 10 நாடுகள் இணைந்து வாங்கிய எரிபொருளை விட அது அதிகம்.

கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த அளவை விட 6 மடங்கு கூடுதலாக ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்துள்ளது. எரிவாயு விவகாரத்தில் அது (ஐரோப்பிய யூனியன்) முடிவில்லாத அளவுக்கு வாங்கியுள்ளது.

ஏனெனில், எரிவாயுவை நாங்கள் இறக்குமதி செய்யவில்லை என கூறினார். நீங்கள் இதற்காக உள்ள ரஷியாவின் எரிபொருள் பற்றிய கண்காணிப்புக்கான வலைதளத்தில் சென்று ஆய்வு செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.

அந்த வலைதளத்தில், என்ன என்னவற்றை, எந்தெந்த நாடுகள் எல்லாம் இறக்குமதி செய்துள்ளன என்பது பற்றிய விரிவான விவரங்கள் அடங்கியுள்ளன. அது மிக மிக உதவியாக இருக்கும் என்று அவர் அப்போது கூறினார்.

இந்தியாவின் இறக்குமதி முடிவை நியாயப்படுத்தும் வகையில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் அதற்குரிய தகவலை வெளியிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், ரஷியாவின் போரானது இந்தியாவின் வளர்ச்சிக்கான உலகம் ஆக்கியுள்ளது என்ற தலைப்பில், செய்தி வெளியிட்டு அதில், உக்ரைன் போரின் கூட்டு விளைவுகளால் இந்தியாவின் ஏற்றம் அதிகரித்து உள்ளது என தெரிவித்து இருந்தது.

ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் விலை உச்ச வரம்பு நிர்ணயித்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் காரணமின்றி எரிபொருள் விலை உயர்வை எதிர்கொண்டு வருகின்றன என மத்திய மந்திரி கூறினார்.

இருந்த போதிலும், ரஷியாவின் படையெடுப்பு இந்தியாவுக்கு சாதகம் என்ற வகையில் அமெரிக்க நாடும் செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று கூறும்போது, ஐரோப்பாவை மீண்டும் சாடியுள்ளார்.

ஆண்டுக்கு 60 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு தனிநபர் வருவாய் கொண்ட சமூகம், தன்னை கவனித்து கொள்ள வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது என்று கூறி கொண்டால், அதனை நேர்மையான ஒன்று நான் ஏற்கிறேன்.

அதேபோன்று, ஆண்டுக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு தனிநபர் வருவாய் கொண்ட சமூகம் இழப்பை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆசியாவின் பாரம்பரிய வினியோகஸ்தர்களாக முன்பு இருந்த, மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஐரோப்பா அதிக அளவில் எண்ணெய்யை வாங்க தொடங்கி உள்ளது. அது, ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியன் ரஷியாவிடம் இருந்து,இந்தியாவை விட 6 மடங்கு கூடுதலான எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் கூறி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story