நமக்குள்ளும் ஹீரோ உண்டு: 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை லாவகமாக காப்பாற்றிய இளைஞர்...!


நமக்குள்ளும் ஹீரோ உண்டு: 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை லாவகமாக காப்பாற்றிய இளைஞர்...!
x
தினத்தந்தி 24 July 2022 12:58 PM GMT (Updated: 24 July 2022 2:00 PM GMT)

செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார்.

பிஜீங்,

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் என்ற நகரில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.

அப்போது, கீழே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அந்த இளைஞரின் பெயர் ஷென் டோங் என்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் கால்களிலும், நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் குழந்தையின் நிலை சீராக உள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடந்த எதுவும் தனக்கு ஞாபகத்தில் இல்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இந்தக் காட்சியை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சியை ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Next Story