சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பலத்த மழை - நகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின


சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பலத்த மழை - நகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
x

சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகர்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் 1.3 மீட்டர் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

தீயணைப்புத்துறையினர் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஹெனான் மாகாணத்தின் ஷாவ்கான் பகுதியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சீனாவின் தெற்கு பிராந்தியத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கையும், கடுமையான வெப்ப சலன காலநிலைக்கு நீல நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் பரவலாக மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story