உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர்: முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் பலி


உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர்: முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் பலி
x

Image Courtacy:AFP

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீவ்,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைனுக்காகப் போரிட்ட முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராணுவ வீரரான ஜோர்டான் கேட்லி, மார்ச் மாதம் இங்கிலாந்து இராணுவத்தை விட்டு வெளியேறினார் என்றும், கவனமாக பரிசீலித்த பிறகு, ரஷிய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவ உக்ரைனுக்குச் சென்றார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story