தேர்தல் களத்தையே மாற்றப்போகும் சம்பவம்: அரசியல் வல்லுநர்கள் கருத்து


தேர்தல் களத்தையே மாற்றப்போகும் சம்பவம்: அரசியல் வல்லுநர்கள் கருத்து
x

டிரம்ப் கூட்டத்தினரை நோக்கி கையை உயர்த்திக்காட்டி ‘போராடுங்கள்’ என கூறியவாறு நகர்ந்து சென்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் பாதுகாப்பு படையினர் அவரை பத்திரமாக அழைத்து சென்றனர்.

அப்போது டிரம்ப் கூட்டத்தினரை நோக்கி கையை உயர்த்திக்காட்டி 'போராடுங்கள்' என கூறியவாறு நகர்ந்து சென்றார். காரில் ஏறும்போதும் அவர் தனது ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்தி காட்டினார்.

இது தொடர்பான புகைப்படங்களை டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் "அமெரிக்காவுக்குத் தேவையான போர் வீரர் இவர்தான்" என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

இதனிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் முகத்தில் ரத்தத்துடன் காட்சியளிப்பது, கையை உயர்த்தி மக்களை நோக்கிக் கத்துவது, பாதுகாப்பு படையினரால் சூழப்பட்டு மேடையை விட்டு வெளியேறுவது ஆகியவற்றின் அசாதாரண புகைப்படங்கள் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் இடம் பெறுவது மட்டுமல்லாது, நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் போக்கையே மாற்றக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் வன்முறையின் இந்த அதிர்ச்சியூட்டும் செயல், ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story