மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி


மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி
x

கோப்புப்படம்

தலைநகர் உள்பட மத்திய மெக்சிகோவின் பெரும்பகுதியை நிலநடுக்கம் உலுக்கியது.

மெக்சிகோ,

வியாழன் பிற்பகல் (உள்ளூர் நேரப்படி) மத்திய மெக்சிகோவை ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து தலைநகரம் முழுவதும் பூகம்ப எச்சரிக்கைகள் ஒலித்தன.

இருந்தபோதிலும் எந்த சேதமும் ஏற்பட்டதாக உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்று மத்திய சிவில் பாதுகாப்பு முகமைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க புவியியல் ஆய்வின் அறிக்கையின்படி, பியூப்லா மாநிலத்தில் மெக்சிகோ நகரத்திற்கு தெற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமமான சியாட்லா டி டாபியாவுக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story