ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு
x

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



காபூல்,



ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் தெற்கே 137 கி.மீ. தொலைவில் இன்று காலை 6.40 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 170 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

அந்நாட்டில் கடந்த ஜூன் இறுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு குறைந்தது ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1,500க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர். ஒரு மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களிடையே அதிர்வு ஏற்படுத்தியுள்ளது.


Next Story