பாகிஸ்தானின் கைபர் பக்துங்வாவில் அதிகப்படியான மின்வெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வாவில் அதிகப்படியான மின்வெட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வாவில் உள்ள உள்ளூர்வாசிகள் அதிகப்படியான மின்வெட்டுகள் மற்றும் நத்ரா & பெனாசிர் வருமான ஆதரவு திட்டம் (BISP) அலுவலகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றிற்காக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தானின் பொருளாதாரம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது, ஏனெனில் மக்கள் மின்வெட்டு போன்ற அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ரம்ஜான் புனித மாதத்தில் மக்கள் நோன்பு இருக்கத் தொடங்கியுள்ளநிலையில், கோதுமையின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்கள் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரம்ஜான் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே பொதுமக்கள் நீண்டகாலமாக மின்சார சுமைகளை எதிர்கொள்வதால் பெரும் நெருக்கடியில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.