Normal
நியூசிலாந்து நாட்டில் 2-வது பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை
நியூசிலாந்து நாடு ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்து வருகிறது.
வெலிங்டன்,
நியூசிலாந்து நாடு ஆரம்பத்தில் இருந்தே கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைத்து வருகிறது.அங்கு புதிய சமூகத் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,862 ஆக உள்ளது. 25 பேர் பலியானதாக பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு அதிக ஆபத்தில் உள்ள பிரிவினருக்கு 2-வது பூஸ்டர் தடுபபூசி போடுவதற்கு அந்த நாட்டின் அரசு நடவடிக்கை எடுக்கிறது. அவர்களில் முந்தைய பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் ஆனவர்களுக்கு இந்த 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அங்கு விரைவில் குளிர்காலம் வர உள்ளதால் வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கையில் நியூசிலாந்து அரசு இறங்கி உள்ளது.
Related Tags :
Next Story