விமான கழிவறையில் தம்பதியர் செய்த செயலால் முகம் சுளித்த பயணிகள்


விமான கழிவறையில் தம்பதியர் செய்த செயலால் முகம் சுளித்த பயணிகள்
x
தினத்தந்தி 13 Sep 2023 8:10 AM GMT (Updated: 13 Sep 2023 8:14 AM GMT)

விமானத்தில் பயணித்த தம்பதியர், கழிவறையில் செய்த செயல், சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

லண்டன்

இங்கிலாந்தின் லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு கடந்த 8ம்தேதி ஈசிஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த ஒரு தம்பதியர், விமான கழிவறைக்குள் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் விமான பணிப்பெண் அங்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த பயணிகளும் அங்கு சென்றுள்ளனர். பின்னர், தயங்கி தயங்கி விமான பணிப்பெண், கழிவறையின் கதவை திறந்துள்ளார். அப்போது அங்கு கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரைகுறை ஆடையுடன் உள்ளே இருந்த தம்பதியர், உடனே கதவை அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிட, அது வைரலாகிவருகிறது

அந்த வீடியோவில், விமான பணிப்பெண் ஒருவர் கழிவறை கதவுக்கு வெளியே பதற்றத்துடன் நிற்கிறார். இதைப் பார்த்த பயணிகள் ஆர்வத்துடன் கதவை திறப்பதற்காக காத்திருக்கிறார்கள். கதவை திறந்து பார்த்தபோது, தம்பதியினர் அலங்கோலமாக இருந்தனர். மற்ற பயணிகள் இதைப் பார்த்து முகம் சுளித்து கூச்சலிட, உள்ளே இருந்த நபர் விரைவாக கதவை அடைக்கிறார். அப்போது ஒரு பெண் ''ஓ மை காட்'' என்று அலறுகிறார்.

விமான பணியாளர்கள் மற்றும் சில பயணிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயில் கைவைத்தபடி தர்மசங்கடத்திற்கு ஆளாகினர்.


Next Story