"கொரோனா நோயாளிகள் தற்கொலை.." - வெளியான அதிர்ச்சி தகவல்..!
சீனாவில் கிராமபுறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அவலம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ஜிங்,
சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுக்கிறது. இந்த சூழலில் அந்நாட்டின் கிராமபுறங்களில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில் கிராமபுற மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் அவை மூடப்பட்டுள்ளதாகவும், நடுத்தர நகரங்களுக்கு மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் அங்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் முதியவர்களை கொரோனா அதிகமாக பாதிக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை கிடைக்காமல் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story