கல்லூரிக்கு வராமல் டிமிக்கு கொடுக்கும் மாணவர்கள்...! நிர்வாகம் செய்த அதிர்ச்சி செயல்!


கல்லூரிக்கு வராமல் டிமிக்கு கொடுக்கும் மாணவர்கள்...! நிர்வாகம் செய்த அதிர்ச்சி செயல்!
x
தினத்தந்தி 21 Oct 2022 8:44 AM GMT (Updated: 21 Oct 2022 8:50 AM GMT)

மாணவர்களை தினமும் கல்லூரிக்கு தவறாமல் வரவைக்க நிர்வாகம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹெனான்

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெனான் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு கல்லூரியில்மாணவர்கள் கல்லூரிக்கு ஒழுங்காக வராமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜாங் என்ற அழகிய ஆசிரியை ஒருவரை நியமித்தது. இதனால் பலகலைக்கழகம் மீது விமர்சனம் எழுந்தது.ஜாங் கவர்ச்சியாக இருந்ததால் பணியமர்த்தப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் மீது மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

சமூக வலைதளத்தில் எத்ர்ப்பு கிளம்பிய நிலையில் ஷாங்கின் திறமைக்காகவே அவரை வேலைக்காக எடுத்ததாக பலகலைகழகம் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

பல்கலைக்கழகம் "அவருடைய சிறந்த கற்பிக்கும் திறனை நம்பியே வேலைக்கு அமர்த்த முடிவு செய்ததாக" கூறியது. ஜாங் தனது வீடியோக்கள் மூலம் கற்பிக்கும் பாணி மற்றும் அவரது உடல் தோற்றம் ஆகிய இரண்டிற்காகவும் பாராட்டப்பட்டார்.

எவ்வாறாயினும், ஜாங் ஹெனான் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகவும், அவரது திறமை காரணமாக பணியமர்த்தப்பட்டதாகவும் பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியது.

சீனப் பல்கலைக்கழகங்களில் கட்டாயப் பாடமான "மாவோ சேதுங் சிந்தனை"யைக் கற்பிக்கும் ஜாங்கிற்கு டிக்டாக்கில் கிட்டத்தட்ட 430,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர்.


Next Story