வங்காளதேசத்தில் இந்து கோவிலில் சாமி சிலை சேதம்: நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!

வங்காளதேசத்தில் இந்து கோவிலில் சாமி சிலை சேதம்: நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறிச்செயல்!
x

வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் உள்ள இந்து கோவிலில் இருந்த சாமி சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் உள்ள இந்து கோவிலில் இருந்த சாமி சிலையை சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெனைதா பகுதி தவுதியா கிராமத்தில் உள்ள ஒரு காளி கோவிலில், சாமி சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு நேற்று காலை கிடந்தது. நள்ளிரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர். நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து, சிலைகள் ஆற்றில் கரைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

வங்காளதேசத்தில் இந்து கோவில் சேதப்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த மாதம், பாரிசாலில் உள்ள காஷிபூர் சர்பஜனின் துர்கா கோயிலில் உள்ள சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் 6 அன்று மோங்லா உபாசிலாவில் உள்ள கைன்மாரி கோவிலில், இந்து தெய்வ சிலைகளை சேதப்படுத்தியதாக மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

Next Story