ஆப்கானிஸ்தான்: மினிபஸ்சில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி


ஆப்கானிஸ்தான்: மினிபஸ்சில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2023 3:58 PM GMT (Updated: 8 Nov 2023 9:33 AM GMT)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று மாலை மினிபஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 27 பேர் பயணித்தனர்.

டேஷ்-இ பர்ஷி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மினிபஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story