இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுர குமார திசநாயகே


இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுர குமார திசநாயகே
x

கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு,

இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டாா்

மேலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை (50 சதவீதத்துக்கும் அதிகம்) கிடைக்காத நிலையில், இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக அனுர குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டாா்.. கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story