இஸ்லாமாபாத் அருகே மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு!


இஸ்லாமாபாத் அருகே மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவு!
x

இஸ்லாமாபாத்தில் இருந்து 303 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே-வடமேற்கே 303 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிகுக்கு அடியில் 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.


Next Story