ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து...!
மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
ஒமன்,
ஓமன் - மஸ்கட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த நிலையில் என்ஜின் பழுது காரணமாக திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விசாரணை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story