தெற்கு ஸ்பெயினில் இரவு விடுதி ஒன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு: 5 பேர் படுகாயம்


தெற்கு ஸ்பெயினில் இரவு விடுதி ஒன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு: 5 பேர் படுகாயம்
x

கோப்புப்படம் 

தெற்கு ஸ்பெயினில் இரவு விடுதி ஒன்றில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மாட்ரிட்,

தெற்கு ஸ்பெயினில் உள்ள மார்பெல்லாவில் உள்ள திறந்தவெளி இரவு விடுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி சண்டை அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதல்களில் 5 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.

உள்ளூர் அவசர சேவையின்படி, தக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு நடந்த சம்பவம் குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் பல கத்திக் காயங்களுடன் கோஸ்டா டெல் சோல் மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் வந்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய மற்றொரு சந்தேக நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story