இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்


தினத்தந்தி 8 Oct 2023 3:11 AM GMT (Updated: 8 Oct 2023 1:59 PM GMT)

இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகலயா முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,


Live Updates

  • 8 Oct 2023 12:35 PM GMT

    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏனெனில் இந்த தாக்குதலை ஹமாஸ் படையினர் அக்டோபர் 6, 1973-ம் ஆண்டு யோம் கிப்பூர் நாளன்று நடத்தியுள்ளனர். யோம் கிப்பூர் என்பது யூத மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும். இந்த யோம் கிப்பூர் தினத்தன்று யூதர்கள் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வார்கள். சரியாக இந்த நாளை குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • 8 Oct 2023 12:06 PM GMT

    ஹமாஸ் படையினர் நடத்திய  தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது

  • 8 Oct 2023 11:57 AM GMT

    காசாவில் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

  • 8 Oct 2023 10:39 AM GMT



  • 8 Oct 2023 10:12 AM GMT

    இஸ்ரேலில் உள்ள சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கியுள்ள இடங்களிலேயே பத்திரமாக இருக்குமாறும் இந்தியர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரம் அறிவுறுத்தியுள்ளது.

  • 8 Oct 2023 9:22 AM GMT

    ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.   காசாவில் 426 இடங்களை குறிவைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அனைத்து பகுதிகளும் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸுக்கு எதிரான போர் தொடரும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 8 Oct 2023 8:16 AM GMT

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸ் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

    இதில், இளம் பெண்ணை ஹமாஸ் பயங்கரவாதிகள் பைக்கில் கடத்தில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடத்தப்பட்ட இளம் பெண் இஸ்ரேலை சேர்ந்த நொவா அர்ஹம்னி (வயது 25) ஆவார். அவர் நேற்று காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் கிபுட்ஸ் ரிம் எல்லையோர நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பருடன் வந்துள்ளார்.

    அப்போது, அங்கு வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அர்ஹம்னியை பைக்கில் கடத்தி சென்றனர். தான் பைக்கில் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்படும்போது அர்ஹம்னி என்னை கொன்றுவிடாதீர்கள் என்று அழுதபடி செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



  • 8 Oct 2023 7:33 AM GMT

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை  300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸ் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதில், இளம் பெண் கொல்லப்பட்டு அவரது உடல் அரை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லப்படும் காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு அரை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லப்பட்ட இளம்பெண் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷனி லொக் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. காசா எல்லையோர நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷனி இஸ்ரேல் சென்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 8 Oct 2023 6:42 AM GMT

    காசா முனையில் உள்ள ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீடு தகர்ப்பு - இஸ்ரேல் பாதுகாப்புப்படை தகவல்

    காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

  • 8 Oct 2023 6:27 AM GMT

    இஸ்ரேல் மீது லெபனானில் இருந்தும் ராக்கெட் தாக்குதல் - அதிகரிக்கும் போர் பதற்றம்

    இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனானில் இருந்து இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    லெபனானில் எல்லையில் உள்ள இஸ்ரேலின் மவுண்ட் டொவ் பகுதியில் இந்த ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் - லெபனான் எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story