ஆப்கானிஸ்தானில் போராட்டக்காரர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு 2 பேர் பலி
4 பெண்கள் காபூல் தெருக்களில் தலீபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
காபூல்
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் பீதியடைந்துள்ள உள்நாட்டு மக்களும் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்வதற்காக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
இப்படி தப்பிக்க பலர் ஒரு பக்கம் முயன்று கொண்டிருந்தாலும். மற்றொருபுறம் பெண்கள் காபூல் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
4 பெண்கள் காபூல் தெருக்களில் தலீபான்களுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ஈரானிய ஊடகவியலாளர் மசிஹ் அலினேஜாட் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காபூலில் உள்ள ஒரு தெருவில் நான்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் கையால் எழுதப்பட்ட காகித அட்டைகளை காட்டி, தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள், சமூகப் பாதுகாப்பு, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை, அரசியல் பங்கேற்பு உரிமை உள்ளிட்ட உரிமைகளை கோருகின்றனர். எங்களது அடிப்படை உரிமைகளை பறிக்கக் கூடாது' என்று கூறுகின்றனர்.
ஜலாலாபாத்தில் தலிபான்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆப்கானிஸ்தானின் கொடியை ஏந்திய இரண்டு எதிர்ப்பாளர்களை தலீபான்கள் சுட்டு கொன்றனர் மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காபூலில் தலீபான் தலைவர் அனஸ் ஹக்கானி ஹெஸ்ப்-இ-இஸ்லாமி தலைவர் குல்புதீன் ஹக்மத்யாரை இன்று சந்தித்தார். மேலும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், டாக்டர் அப்துல்லா பசல் ஹாதி முஸ்லீம் மற்றும் பலரை காபூலில் சந்தித்தார்.
#Taliban firing on protesters in Jalalabad city and beaten some video journalists. #Afghanidtanpic.twitter.com/AbM2JHg9I2
— Pajhwok Afghan News (@pajhwok) August 18, 2021
Related Tags :
Next Story