அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு ஆதரவாக இறந்தவர்கள் பெயரில் மின்னஞசல் மூலம் மோசடி


அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடனுக்கு ஆதரவாக இறந்தவர்கள் பெயரில் மின்னஞசல் மூலம் மோசடி
x
தினத்தந்தி 12 Nov 2020 6:45 AM GMT (Updated: 12 Nov 2020 6:45 AM GMT)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவாக இறந்தவர்கள் பெயரில் மின்னஞசல் மூலம் வாக்கு செலுத்தி மோசடி நடைபெற்றதாக பிரபல செய்தி சேனல் தெரிவித்து உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் டிரம்ப் சோர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் அவர் முன்பு போல பொதுவெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் படை வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு வீரர்களின் கல்லறையில் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார்.

முன்னதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிரம்ப் கோல்ப் விளையாடிய காட்சிகள் மட்டும் வெளியாகின. அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும், அதனை டிரம்ப் ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்த தில்லு முல்லு மோசடியை பிரபல பாக்ஸ் நியூஸ் செய்தியாளர் டக்கர் கார்ல்சன் அம்பலப்படுத்தியுள்ளார். அவரின் கூற்றுபடி, தேர்தல் நாளன்று ஏற்கனவே இறந்த அமெரிக்கர்கள் வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் குறிப்பாக பைடனுக்கு வாக்குசெலுத்திய இறந்தவர்களின் பட்டியலை டக்கர் கார்ல்சன் வெளியிட்டுள்ளார். இறந்தவர்களுக்கு பதிலாக யார் வாக்கு செலுத்தினர் என தெரியவில்லை என கூறினார்.

மேலும் மின்னஞசல் மூலம் வாக்கு செலுத்தியதில் இந்த மோசடி நடத்துள்ளதாக கார்ல்சன் குறிப்பிட்டார். நமது வாக்கு செலுத்தும் முறையை இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர் மாற்றிவிட்டனர். நமது தேர்தல் அமைப்பு ஒருபோதும் ஒழுங்கற்றதாக இருந்ததில்லை மற்றும் ஒருபோதும் சூழ்ச்சியால் பாதிக்கப்படாது.

மேலும், இந்த மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருக்கும் முன்னணி ஊடகங்களை கடுமையாக சாடிய டக்கர் கார்ல்சன்  ஒட்டுமொத்தமான பைடனுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சித்தார்.




Next Story