கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் - டிரம்ப் வருத்தம்
கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
உலகில் கொரோனாவால் 58 லட்சத்து 13 ஆயிரத்து 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 3 லட்சத்து 57 ஆயிரத்து 896 பேர் பலியாகி உள்ளனர். 25 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான மைல்கல்லை எட்டியுள்ளோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சமயத்தில் பணியாற்றுபவர்களுக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் எப்போதும் உங்களுடன் இருப்பார் எனப் பதிவிட்டுள்ளார்.

We have just reached a very sad milestone with the coronavirus pandemic deaths reaching 100,000. To all of the families & friends of those who have passed, I want to extend my heartfelt sympathy & love for everything that these great people stood for & represent. God be with you!
— Donald J. Trump (@realDonaldTrump) May 28, 2020
Related Tags :
Next Story