இம்ரான் கானுக்கு தெரிந்தது எல்லாம் போதை பழக்கம் ,முறைகேடான உறவு முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
இம்ரான் கானுக்கு தெரிந்தது எல்லாம் போதை பழக்கம் ,முறைகேடான உறவு என அவரது முன்னாள் மனைவி தனது சுயசரிதை புத்தகத்தில் குற்றம்சாட்டி உள்ளார். #ImranKhan
லண்டன்
பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், தனியாக பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி, அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, அவர் 3 திருமணங்கள் செய்துள்ளார். அதில், ஜெமிமா கோல்ட்ஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை டைவர்ஸ் செய்துவிட்ட இம்ரான் கான், சமீபத்தில் புஷ்ரா மனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார்
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்று இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக கூறபட்டுகிறது. இந்த நிலையில் அவரது முன்னாள் மனைவி ரெஹம் கான் இம்ரான் கான் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது சுயசரிதை புத்தகத்தில் வெளியிட்டு உள்ளார்.
லண்டனில் அமேசான் வழியாக வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் இம்ரான் கான் உடனான தனது 10 மாத திருமண வாழ்க்கை பற்றி ரெஹம் கான் பலவேறு தகவல்களை கூறி உள்ளார். அதில், இம்ரான் கான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், குடும்ப வாழ்க்கையின் விதிமுறைகள் புரியாத நபர், பெண்களை மதிக்க தெரியாத ஆசாமி.
‘’அவருக்கு தெரிந்தது எல்லாம் செக்ஸ், போதை மருந்து பழக்கம், நடனம் ஆடுவது போன்றவை மட்டுமே. முறைகேடான செக்ஸ் உறவில் அதிகம் விருப்பம் கொண்ட நபர் இம்ரான் கான்.
குடும்பத்தையே பராமரிக்க தெரியாத இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கி சிரமப்பட்டபோது, நான் சில ஆலோசனைகள் தந்து உதவினேன். பல தனிப்பட்ட வழக்கு விசயங்களையும் சந்திக்கவும் நேரிட்டது.
முறையாக திருமணம் செய்யும் முன்பாகவே முறைகேடான வழியில் இம்ரான் கானுக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளன. இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரோடு முறைகேடான உறவு வைத்திருந்த பெண்களில் சிலர் இந்தியாவை சேர்ந்தவர்.
ஒருவர் கூட பகிரங்கமாக இந்த உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை,’’ எனக் கூறியுள்ளார்.
இம்ரான் கானின் கடந்த காலத்தை அதிகம் கிளறி எழுதப்பட்டுள்ளதால், ரெஹம் கான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்திற்கு, பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.
Related Tags :
Next Story