ஞாபகமறதி வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி கிராமம்
பிரான்சில் ‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தனி கிராமத்தை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்சில் அடுத்த ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப்பட இருக்கும் இந்தக் கிராமத்தில், முதல்கட்டமாக 120 நோயாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படவிருக்கிறது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமுக்கு அருகே பரிசோதனை முறையில் செயல்பட்டு வரும் அல்சைமர் கிராமம் ஒன்றைக் பின்பற்றி பிரான்சும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இங்கு அனுமதிக்கப்படுபவர்கள் சாதாரண வாழ்வை வாழும் உணர்வை அளிக்கும் வகையில் இக்கிராமம் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரான்சில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அல்சைமர், டிமென்சியா போன்ற ஞாபகமறதி வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 2 லட்சம் பேருக்கு அல்சைமர் பிரச்சினை கண்டறியப்படுவதாக பிரான்ஸ் அல்சைமர் கூட்டமைப்பு கூறுகிறது.
தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் எதுவும் அல்சைமர் நோயை முழுமையாக குணமாக்கக்கூடியதாக இல்லை.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்படும் அல்சைமர் கிராமம், பிரான்சில் உள்ள ஒரு சாதாரண கிராமத்தைப் போலவே இருக்கும். ஒரு வழக்கமான வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு அது உருவாக்கப்படுகிறது.
இங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், வேலி எதுவும் இருக்காது.
மருத்துவமனையில் இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற் படுத்தக்கூடாது என்னும் நோக்கில் உருவாக்கப்படும் இந்தக் கிராமத்தில் தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாது.
உதவியாளர்களும் சீருடை அணியாமல் சாதாரண உடையே அணிந்திருப்பார்கள். நெதர்லாந்தைப் பின்பற்றி இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டாலும், இங்கு ஓர் ஆராய்ச்சி அமைப்பும் இருக்கும். அதன் நோக்கம், பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளுடன் இந்தக் கிராமத்தில் சிகிச்சை பெறுவோரின் முன்னேற்றத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதாகும்.
நோயாளிகள் வசிக்கும் கிராமத்திலேயே இந்த ஆய்வாளர்களும் தங்கியிருப்பார்கள். 100 உதவியாளர்களும், தன்னார்வலர்களும் சிகிச்சையில் உதவுவார்கள்.
நோயாளிகளின் மனரீதியான தனிமையைப் போக்குவதற்காக, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களும் இக்கிராமத்தில் இருக்கும்.
இங்கு ஒரு பேரங்காடியும் அமைக்கப்படும். நோயாளிகள் பொருட்களை வாங்கிவிட்டு கட்டணம் செலுத்த மறந்துவிட்டாலும், அவர்களது உதவியாளர்கள் அதற்குப் பொறுப்பேற்று உரிய தொகையைச் செலுத்துவார்கள்.

Related Tags :
Next Story