லெபனான் திரும்பினார் ஹரிரி; ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என தகவல்
லெபனான் திரும்பிய பிரதமர் சாத் ஹரிரி இன்று நடைபெறும் சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என தகவல் தெரிவிக்கின்றது.
பெய்ரூட்,
லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில் இருந்தபடியே, ’தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவி விலகுகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அதனை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் ஹரிரி, சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார் என லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் கூறினார். இந்த குற்றச்சாட்டை சவூதி அரேபியா மறுத்தது.
அதன்பின்னர் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பினை ஏற்று ஹரிரி பாரீஸ் சென்றுள்ளார் என தகவல் வெளியானது.
மேக்ரானுடனான சந்திப்பிற்கு பின்னர் ஹரிரி லெபனான் நாட்டிற்கு நேற்றிரவு திரும்பியுள்ளார். அவர் எகிப்து மற்றும் சைப்ரஸ் வழியே பெய்ரூட் நகருக்கு வந்து சேர்ந்துள்ளார்.
லெபனானில் இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் ஆன் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் நபிஹ் பெர்ரி ஆகியோருடன் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Related Tags :
Next Story