லாகூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி அல்லது மகள் போட்டி?


லாகூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி அல்லது மகள் போட்டி?
x
தினத்தந்தி 8 Aug 2017 2:11 PM GMT (Updated: 8 Aug 2017 2:11 PM GMT)

லாகூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழலில் நவாஸ் ஷெரீப்பை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28–ந் தேதி தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக சாகித்கான் அப்பாஸி பதவி ஏற்றுள்ளார். இதற்கிடையில், நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர் எம்.பியாக தேர்வான லாகூர் தொகுதி காலியானது. 

இந்த தொகுதியில், முதலில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஷபாஸ் ஷெரீப் போட்டியிட நவாஸ் ஷெரீப் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பின் தகுதி நீக்கத்தால் காலியாகி உள்ள லாகூர் பாராளுமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 17–ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் கல்சூம் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story