ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் சாவு


ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் சாவு
x

ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வறுமை, பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு மோதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டின் மெல்லிலா நகருக்குள் நுழைவதற்காக மொராக்கோ நாட்டின் எல்லையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் குவிந்தனர். அங்கு பணியில் இருந்த மொராக்கோ எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அகதிகளை அங்கிருந்து கலைந்துபோக செய்ய முயற்சித்தனர். இதில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அகதிகள் எல்லையில் உள்ள வேலியை தாண்டி மெல்லிலா நகருக்குள் முயற்சித்தனர். இதில் கடும் கூட்ட நெரிசல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி அகதிகள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்ட அகதிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் ஸ்பெயின்-மொராக்கோ எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story