உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீச்சில் 17 பேர் பலி


உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீச்சில் 17 பேர் பலி
x

Image Courtacy:AFP

உக்ரைனில் ரஷிய ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 17 பேர் பலியாகினர்.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. இந்த சூழலில் உக்ரைனிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்தது. 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜாபோரிஜியா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரஷிய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன.

இதில் வானவளாவிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து தரை மட்டமானது. இது தவிர 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. ரஷிய படைகளின் ஏவுகணை வீச்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் பலியாகினர். 40க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர்.


Next Story