இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகிட முன்வர வேண்டும்: கலெக்டர் தகவல்


இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகிட முன்வர  வேண்டும்: கலெக்டர் தகவல்
x

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகிட முன்வர வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மூலமாக பயன்பெறுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தும், தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான அரசு வழங்கும் அனைத்து மானியங்களை பெற்று பயன்பெறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 11 பயனாளிகளுக்கு ரூ.109 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்சமயம் வரை 22 பயனாளிகளுக்கு 546.61 லட்சம் மதிப்பீட்டில் இலக்கீடு விட அதிக அளவு எய்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு 28 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்சமயம் வரை 58 பயனாளிகளுக்கு ரூ.64.85 லட்சம் இலக்கீடு விட அதிக அளவு எய்தப்பட்டுள்ளது. அதே போல் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு 255 பயனாளிகளுக்கு ரூ.741 லட்சம் இலக்கீடு பெறப்பட்டு, தற்சமயம் வரை 236 பயனாளிகளுக்கு ரூ.764 லட்சம் இலக்கீடு எய்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு இலக்கீடு பெறப்பட்டு, தற்சமயம் வரை 73 பயனாளிகளுக்கு இலக்கீடு எய்தப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள இளைஞர்கள் கரூர் மாவட்ட தொழில் மையத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என்றார்.


Next Story