உலக மரபு வாரவிழா
உலக மரபு வாரவிழா நடைபெறுகிறது.
உலக மரபு வாரவிழாதொன்மையான வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து அவற்றை பாதுகாப்பதோடு மட்டுமின்றி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அழிவிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டநினைவுச் சின்னங்கள் இந்திய மற்றும் தமிழகத் தொல்லியல் துறைகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பழங்கால கோவில்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், மக்கள் வாழ்விடங்கள், பாறை ஓவியங்கள் போன்றவைகள் முக்கியமானவைகளாகும். அரியலூர் மாவட்டத்தில் நான்கு நினைவுச் சின்னனங்கள் தமிழக தொல்லியல் துறையால் பாதுக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு நினைவுச் சின்னங்களையும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எந்த நாளிலும் சென்று இலவசமாகப் பார்வையிடலாம். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள இந்த உலக மரபு வார விழாவில் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்துதல் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடங்களில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்தல், பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி எடுத்துரைத்தல், ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்ற போட்டிகள் வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என அரியலூர் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.